#Breaking:தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று கீழ்க்கண்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.மேலும்,சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக,
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை:
இன்று தூத்துக்குடி,திருவள்ளூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
நெல்லை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025