#Breaking : நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..!

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்பொழுதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை திருவள்ளூர் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது