#Breaking : தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …!

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் ஏற்கனவே திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், நாகை, கடலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்திலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025