#BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!
மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் எதிரொலியால் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.