சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரிய நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர்.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகை ரூ.32.30 லட்சத்தை ஆக.7-ல் செலுத்திவிட்டோம் என்று விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு சொகுசு கார் விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது, தனி நீதிபதி சுப்பிரமணியம், வரி வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வரி என்பது பங்களிப்புதானே தவிர தானாக வழங்கும் நன்கொடை அல்ல.
நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது உள்ளிட்ட எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தன்னை பற்றி தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…