#Breaking : சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி.!
ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்த விதிமுறைகளோடு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டனர். அப்போது தமிழக அரசு, இந்த சேவல் சண்டையின் போது, சூதாட்டம் நடைபெறுவதாகவும் சேவல்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தால் அனுமதி அளிக்கலாம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,
- சேவல் சண்டயின் போது சூதாட்டம் நடைபெற கூடாது.
- சேவல்களை துன்புறுத்தக் கூடாது.
- சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது.
- சேவல்களின் கால்களில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்கள் கட்டக்கூடாது.
- சேவல் சண்டை நடைபெறும் இடத்தில் காவலர் ஒருவரும், கால்நடை மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை முன் நிறுத்தி அந்த சேவல் சண்டை நடைபெறக் கூடாது.
மேற்கண்ட விதிமுறைகளை விதித்து ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மீறினால், விழா ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.