#BREAKING: நேரடி விசாரணையை தொடங்க உயர்நீதிமன்றம் முடிவு.!
செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழு நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி முறையில் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இதனால், 160 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சோதனை முறையில் இரண்டு வாரங்கள் அமல்படுத்த உள்ளனர்.
முதற்கட்டமாக இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வு மட்டுமே நேரடி விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.