#BREAKING: திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, கடந்த 19ம் தேதி ஆவியூர் என்ற கிராமத்தில் பணம், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் அதனை புகைப்படம் ஆதாரத்துடன் தொகுதி தேர்தல் அதிகரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்து, கோரிக்கை வைத்துள்ளார்.