#BREAKING: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 13 செ.மீ மழையும், சென்னை மெரினாவில் 10 செ .மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடலில் வரும் 24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.