#Breaking:45 கி.மீ வேகத்தில் காற்று;10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இது வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும்,இதன்காரணமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,அவை வானிலை இடையூறு காரணங்களால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை,தஞ்சை,நாகை,திருவாரூர்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும்,சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு,விழுப்புரம்,மயிலாடுதுறை,கடலூர்,நாகை,புதுக்கோட்டை,தஞ்சை,திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும்,இதனால்,தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025