#BREAKING: 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

Default Image

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வேலூர், திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்