தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!
நாளை முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் முடிவடையவுள்ள நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அரபிக்கடலில் மே 31 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்று வீசிவருவதால், அந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரித்த நிலையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, சேலம், கரூர், வேலூர், நாமக்கல், தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.