#BREAKING: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபோன்று நாளை திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புண்டு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கூறியுள்ளது. எனவே, தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 7, 2022