#BREAKING: மூன்று நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருயப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் கூறியுள்ளது.
19, 20 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், மத்திய மற்றும் தெற்கு அரபிக்கடல், கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 16, 2022