#BREAKING: 14 முதல் 15 வரை.. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் இன்று முதல் 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கெழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று வரும் 17-ஆம் தேதி தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதன்பின் வடகிழக்கு பருவமழை 20-ஆம் தேதி தொடங்கும் கணிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 14, 2022