#BREAKING: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது., ஜூன் 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 4 செமீ, குமரபாளையத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த கற்று வீசக்கூடும் என்றும் தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி கற்று வீசக்கூட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 7-ல் அரபிக்கடலின் தென்கிழக்கு, மத்திய கிழக்கு, லட்சத்தீவு, கேரளா – கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.