கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று இந்த கீழ்க்கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, குமரி,நாகை, மயிலாடுதுறை,விழுப்புரம்,திருவாரூர்,கள்ளக்குறிச்சி,கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
மேலும்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பெரம்பலூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை,மேல்நிலை வகுப்புகளுக்கு சூழலைப் பொறுத்து தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…