சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித் துறை முதன்மை செயலாளராக / ஆணையராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையராக பிரபாகரர் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு மாற்றப்பட்டு பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் வர்க்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…