சென்னை:உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்,விதிகள் திருத்தப்பட்டதா? என ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில்,நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,காவல் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் நியமிக்கப்பட்டதாகவும்,விதிகள் திருத்தப்பட்டதா? என்று அரசிடம் தகவலைப் பெற்றுக் கொண்டு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காவல் சீர்த்திருத்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த ஏ.ஜி.மௌரியா மற்றும் சரவணன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும்,ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…