#Breaking:நெல்லை சாஃப்டர் பள்ளி கட்டடம் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா?..!

Default Image

நெல்லை:சாஃப்டர் பள்ளிக்கு தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில்,தீயணைப்புத்துறை சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில்,3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞான செல்வி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை டிச.31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கைதான தலைமை ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து 18 குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி,நேற்று நெல்லை சாஃப்டர் பள்ளியில், சம்பவம் நடத்த இடத்திற்கு நேரில் சென்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதற்கிடையில்,சாஃப்டர் பள்ளிக்கு தடையின்மைச் சென்று முறையான ஆய்வுக்கு பின் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்,சாஃப்டர் பள்ளிக்கு தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில்,தீயணைப்புத்துறை சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுகாதாரத்துறை சார்பிலும் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேசமயம்,மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட சுகாதார சான்றிதழில் கட்டட நிலைத்தன்மைக்கு சான்றிதழ் சமர்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,முறையாக ஆய்வு செய்யாமல் சாஃப்டர் பள்ளிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது தெரிய வந்தால்,சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்