#Breaking:சற்று முன்…அதிரடியாக குறைந்த பெட்ரோல்,டீசல் விலை- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையானது.
அந்த வகையில்,கடந்த 45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசு களால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.