#Breaking:கல்வி கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் ஹால் டிக்கெட் – மெட்.பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.இதனிடையே,கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது எனவும்,அதன்படி,கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்,கட்டணத்தில் மீதி தொகை செலுத்தாதவர்களுக்கும் பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,பொதுத்தேர்வில் எந்த ஒரு மாணவருக்காவது ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால்,சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க நேரிடும் மற்றும் அப்பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.