#BREAKING: குரூப் 4 தேர்வு ரத்து இல்லை – டிஎன்பிஎஸ்சி .!

Default Image
  • குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை  நீக்கி விட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடபட்டு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
  • கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளது.

குரூப் 4 முறைகேட்டால் மாற்ற தேர்வர்கள் பயத்தில் இருந்தனர்.ஏன்னென்றால் இந்த முறைகேடு காரணமாக தேர்வு ரத்து செய்து விடுவார்களோ.. ? என்ற பயத்தில் இருந்த வந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை ஒன்றை அறிவித்து உள்ளது.

அதில் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என கூறியுள்ளது. கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை  நீக்கி விட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடபட்டு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த  நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.  முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.

மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய விசாரணையில் ,99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.

இதைதொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை 12 -க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump
VIRART INJURY
TN Assembly - M K Stalin
US tariffs