சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து 39 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என புகார் எழுந்த நிலையில் ,டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது.
தேர்வாணையம் நடத்திய விசாரணையில் , 99 பேர் இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்து முறைகேடு செய்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது.
இந்நிலையில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த 12 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படை எஸ்.பிக்கள் அமைத்து தனித்தனியாக விசாரித்து வந்த நிலையில் 3 பேர் சிபிசிஐடி போலீசார் கைது செய்ததாகவும் ,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…