Breaking:பெரும் சோகம் – தேர் திருவிழாவில் 11 பேர் பரிதாபமாக பலி!

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,நேற்று நள்ளிரவு நடைபெற்ற களிமேடு தேர் திருவிழாவில் தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிழந்துள்ளதாகவும்,10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,நான்கு பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தேரை சுற்றி தண்ணீர் இருந்ததன் காரணமாக மக்கள் பலர் தள்ளி நின்றதால் பெரும் உயிரிழப்பு சேதம் தவிர்ப்பு என கூறப்படுகிறது. இந்நிலையில்,விபத்துக்கான காரணம் குறித்து அறிய விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர்,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025