தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநரும் ஒப்புக்கொண்டார்.இந்த சூழலில்,நீட் விலக்கு மசோதா,கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…