#BREAKING: நீட் மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Default Image

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்.1-ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு துணை நிற்கிறது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, கடந்த தமிழக சட்டமன்றத்தில், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்து வந்த நிலையில், இந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். அரசுக்கு திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கே மீண்டும் திருப்பி அனுப்புவோம் என்று திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்