சிம்லா:சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆளுநர்கள் அரசுகள் அனுப்பும் கோப்புகள் மீது எந்தவிதமான முடிவுகளையும் எடுப்பதில்லை.அவ்வாறு எடுத்தாலும் மிகவும் காலத்தாமதமாக எடுக்கிறார்கள்.இதனால்,மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அரசுகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சட்டமன்றங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில்,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வலியுத்தியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.எனவே,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் உடனடியாக அதனை அனுப்ப வேண்டும் என்று இமாச்சலப்பிரதேசத்தின்,சிம்லாவில் நடைபெறும் மாநில சட்டப்பேரவை சபநாயக்கர்கள் மாநாட்டில் அப்பாவு இதனை தெரிவித்துள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…