#BREAKING: ஜனவரி 13ல் ஆளுநர் மாளிகை முற்றுகை – திருமாவளவன் அறிவிப்பு
ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம்.
ஜனவரி 13-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநரின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது. தேசிய கீதம் இசைப்பதற்கு முன் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். ஆளுநர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியில்லை, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.