#BREAKING: தமிழ்வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழ் வழியில் பயின்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.சி தேர்வில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மட்டும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது.
ஆனால், 8 மாதங்களாக அம்மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.