#BREAKING: செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 23-ஆம் தேதி தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து என அறிவித்தார்.
அதற்கான அரசாணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த செமஸ்டரில் எடுத்த மதிப்பெண்களின் 30% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து (INTERNAL EXAM) 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண்ணை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய செமஸ்டரில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும். அந்த தேர்வுகள் ரத்து செய்யமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.