#BREAKING: மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இவைகளை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

Default Image

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு.

தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திருக்கோயில்களில் இதற்காக தனியாக ஒரு பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும். சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வுத்தளங்கள் அமைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை உடனே செயல்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க முதுநிலை திருக்கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்