#BREAKING: மாணவர்களுக்கு அரசு கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு.!
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கறிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ. 13,610, பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,610 ஆக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எம்டி, எம்எஸ், எம்டிஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3,000, எம்எஸ்சி நர்ஸின் கட்டணம் ரூ.5,000 ஆக நிர்ணயம்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி அண்மையில் சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டது. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு, கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்டணம் குறைப்பு தொடர்பாக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராடி வரும் நிலையில், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.