#BREAKING: ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு!
ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயன்பெறும் வகையில் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில், எரிபொருகளின் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மீட்டர் பொருத்தியும், செய்லபடுத்தாத ஆட்டோக்களை கண்டறிய, போக்குவரத்துத்துறையும், காவல்துறையும் திடீர் சோதனையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆட்டோவில் மீட்டர் பொருத்த வேண்டும் என்பதை அமல்படுத்தக்கோரி ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.