#BREAKING : அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு…!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, மருத்துவ படிப்பை தொடர்ந்து பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.