திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிக்காக அரசு அனுமதி அளித்து, தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 50% பார்வையாளர்களுடன் இயங்கி வந்த நிலையில், தற்போது 100% பார்வையாளர்களாக அதிகரித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் முறையான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திரையரங்குகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால், சில தினங்களுக்கு முன்பு விஜய் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஊரடங்கு அறிவிப்பின் போது இதுகுறித்து எந்த தகவலும் அரசாங்க சார்பாக வெளியாகவில்லை. இதனால் ஏற்கனவே உள்ள 50% மட்டும் தான் என்று கூறப்பட்டது.
பின்னர் தொடர்ந்து திரையரங்கு சங்க உரிமையாளர்கள் தமிழக அரசிடம் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கினால்தான் எங்கள் நெருக்கடிகளை சமாளிக்க முடியும் என வலியுறுத்தி வந்தனர். இன்று கூட நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் நன்றி உள்ளவனாய் இருப்பேன் என அரசுக்கு வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…