அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,தற்போது அவர் மீது மேலும் 3 பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதியப்பட்டு தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது.
இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறையினரால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நிராகரிக்கப்பட்டு,பின்னர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில்,உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.தங்கள் தரப்பை கேட்காமல் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்தது.
இதனையடுத்து,ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை நேற்று முடக்கியது.தலைமறைவாகி இருக்கும் ராஜேந்திர பாலாஜி பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலில்,தற்போது அவரது வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டது.சாத்துரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது.விருதுநகர் எஸ்.பிக்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என காவல்துறை ஆய்வு செய்து வரும் நிலையில்,தற்போது அவர் மீது மேலும் 3 பணமோசடி புகார் விருதுநகர் காவல்துறையிடம் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி,சிவகாசியைச் சேர்ந்த தூயமணி மனைவி குணா தூயமணி என்பவர் அவரது மகனுக்கு APRO வேலை வாங்கி தரவேண்டி ரூ.17 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும்,மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த நாதன் மகன் மீனாட்சிசுந்தரம் என்பவர் மதுரை மாநகராட்சியில் அரசு வேலை பெற ரூ.7 லட்சம் கொடுத்து ஏமாந்ததாகவும்,கடலூர் அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர் என்பவர் அவரது நண்பரான தரணிதரன் என்பவருக்கு இந்து சமய அறநிலைய துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதற்காக ரூ.7.5 லட்சம் கொடுத்து ஏமாந்ததாகவும் என 3 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,அவர்மீது மேலும் வழக்குகள் பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி,அரசு வேலை மோசடி என்பதால் ஏற்கனவே உள்ள வழக்குகளில் விருதுநகர் காவல்துறையினர் இதனை சேர்க்கிறார்களா? அல்லது தனியாக வழக்கு பதிவு செய்கிறார்களா? என்று விரைவில் தெரிய வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…