#BREAKING :உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி,ஒருவருக்கு அரசு வேலை -முதலமைச்சர் அறிவிப்பு

சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றது .இதன்விளைவாக பாதுகாப்பிற்காக காவலர்கள் அனைவருமே சாலைகளில் தான் நிற்கின்றனர். இதற்கு இடையில் சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த அருண் காந்தி எனும் இளம் வயது போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் நேற்று மதியம் 3. 15 மணி அளவில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இந்நிலையில் மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் அருண்காந்த் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும். ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.