இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்:
“அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக,பலமுறை எச்சரித்தும் பணியிடத்தில் உடன் பணிபுரிவோரை பணி நேரத்தில் வீடியோ எடுத்த அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்,அரசு ஊழியர்கள் விதிப்படி மருத்துவத்துறை செயலாளர் வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும்,இந்த உத்தரவை நான்கு வாரங்களில் நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்ப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…