BREAKING : அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக மக்களின் வேண்டுகோளை அடுத்து இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொலைத்தொடர்பு துறை சபையில் தமிழகம் முழுவதும் செட் அப் பாக்ஸ் வழங்கப்பட்டு அரசு சேவை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தமுறை நடைமுறையில் உள்ளது. இதற்க்கு மாத கட்டணமாக 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வரை வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் வேண்டுகோளை அரசு கேபிள் டிவி மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி எஸ் டி – 18 ரூபாய் சேர்த்து 138 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய கட்டணம் ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025