#Breaking:குட்நியூஸ்…மாணவிகளுக்கு மாதம் ரூ.1000;நேரடியாக வங்கிக்கணக்கில்- நிதியமைச்சர் அறிவிப்பு!
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில்,அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
குறிப்பாக,அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும்,அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும்,முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.