#BREAKING: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 குறைவு.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,760 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 சரிந்து, ரூ.4,740 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, சில்லறை வர்த்தகத்தில் ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தின் உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.760 குறைந்திருப்பது நகை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வட்டி விகிதங்களை அமெரிக்க மைய வங்கி அதிகரிக்க வாய்ப்பு என தகவல் வெளியான எதிரொலி காரணமாக தங்கம் விலை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம ரூ.5,139க்கும், ஒரு சவரன் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41,112க்கும் விற்பனை செய்யப்படுகிறது.