#BREAKING: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ் – ‘தங்கம் விலை’ மேலும் குறைவு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.38,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ரஷ்யா – உக்ரைன் இடையேயான தொடர் போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் அதிகரித்து வந்தது. இதன்பின் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த வார தொடக்கத்தில் இருந்து சற்று சரிந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,608க்கும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,826க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோன்று சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.18 சரிந்து, ரூ.5225.00 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ. 41800.00 ஆகவும் வர்த்தகமானது.
இந்த நிலையில், தங்கம் விலை மேலும் இன்று குறைந்து காணப்படுகிறது. அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,796 ஆக வர்த்தகமாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து, ரூ.72.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் இன்று 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5195 ஆகவும், 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.41560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இந்த நிலை தொடருமா அல்லது மீண்டும் விலை அதிகரிக்கக்கூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனால், தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஓர் நற்செய்தியாகும் என்பது குறிப்பிடப்படுகிறது.