#Breaking:அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்…அகவிலைப்படி உயர்வு மசோதா இன்று தாக்கல்?..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.
ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,அரசு ஊழியர்களின் சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அதைப்போல,தமிழ் பல்கலைக்கழகம் திருத்த மசோதா,அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதாவும் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.