தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது கிடைக்காததால் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.
இந்நிலையில், இன்று முதல் மதுபான கடைகளைத் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதிப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7 -ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை எனவும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…