BREAKING: குட் நியூஸ்.! கடலூரில் ஒரே நாளில் 214 பேர் டிஸ்சார்ஜ்.!
இன்று மட்டும் கடலூரில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 413 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை 28 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், 384 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மட்டும் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களில், 146 பேர் காலையிலும், 68 பேர் மாலையில் வீடு திரும்பியதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இன்று குணமடைந்த 214 பேரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது