#BREAKING: அட்சய திரிதியை முடிந்ததும்… தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை.
அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உயரத்தொடங்கியது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.38,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.68.30க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்து நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருப்பது நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அட்சய திரிதியை நாளில் ஒரு சவரன் தங்க நகை ரூ.38,528க்கு, ஒரு கிராம் தங்கம் ரூ.4,816கும் விற்பனையானது. அதேநேரம் அன்றைய தினம் மாலையில் ஒரு சவரன் தங்க நகை ரூ.38,368க்கு விற்பனையானது. மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்ததால் நள்ளிரவு வரையில் வியாபாரம் நடந்ததாக கூறப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் அட்சய திரிதியை நாளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்பனையானதாக தகவல் வெளியாகியிருந்தது. கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது இது அதிகம் என்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025