#BREAKING: ஒரே அடியாக உயர்ந்தது தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகை விரும்பிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சர்வேதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்தவகையில் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதன் காரணமாக சில நாட்களாக தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டது.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், தங்கத்தின் மீதான முதலீடு பக்கம் மக்கள் திரும்பி வந்த நிலையில், மீண்டும் ஒரே அடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, நகை விரும்பிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.4,810க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.68.50க்கு விற்பனையாகிறது.