#BREAKING: ரூ.40 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, 8 கிராமுகளை கொண்ட ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பங்குசந்தைகளும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று கடும் சரிவை கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையும் ஒரு சவரனுக்கு ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 காசு உயர்ந்து, ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமோ என அச்சம் நிலவி வருகிறது. பங்குசந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,688 வரை அதிகரித்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன் ரூ.37,752 ஆக இருந்த ஒரு சவரன் விலை இன்று ரூ.40,440 ஆக அதிகரித்து இருப்பது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்