#BREAKING: 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் குஷி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து, வாடிக்கையாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.39,656க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து, ரூ.4,957க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து, ரூ.73.50க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,500 குறைந்து, ரூ.73,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.